இத்தாலிய அரசின்  துரோகச் செயல் ஏற்கமுடியாதது இந்திய மீனவர்களை சுட்டு கொன்ற வழக்கில் கைதான இத்தாலி கடற் படை அதிகாரிகளை இந்தியாவுக்கு வழக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்க முடியாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதற்கு பாஜக கடும் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ராஜீவ்பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; “இத்தாலிய அரசின் இந்த துரோகச்செயல் ஏற்கமுடியாதது. அங்குசென்ற கடற்படை அதிகாரிகளை உடனடி யாக இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவேண்டும். இந்திய சட்டங்கள் படியும், இந்திய நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்” என்றார்.

Leave a Reply