கொள்கையில்லா கர்நாடக ஜனதா கட்சியை எடியூரப்பா கலைத்து விடலாம்கொள்கையில்லா கர்நாடக ஜனதா கட்சியை எடியூரப்பா கலைத்து விடலாம் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

இது குறித்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : பா.ஜ.க.,விலிருந்து பிரிந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக

ஜனதா கட்சிக்கு என்று சிறப்பான கொள்கைகள் எதுவும் இல்லை. பா.ஜ.க.,வை அழிக்கவேண்டும் என்பதனையே அந்த கட்சியினர் குறியாகவைத்து செயல்படுகின்றனர். அவர்களின் அந்த திட்டம் உள்ளாட்சிதேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. இதைமட்டுமே கொள்கையாக வைத்து செயல்படும் க.ஜ.க .,வை எடியூரப்பா கலைத்து விட்டு வேறு உபயோகமான பணியில் ஈடுபடலாம் .

முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், 2 ரூபாய்க்கு ஒருகிலோ அரசி, அறநிலை துறையின் கீழ் உள்ள 37 ஆயிரம் கோயில்களுக்கு நிதிஉதவியை அதிகரித்துள்ளது, சாலைமேம்பாடு, குடிநீர்பிரச்னை ஆகியவற்றை போக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் படி பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை செயல் படுத்த அரசு முனைந்துள்ளது. இதனால் காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள் செய்வதறியாது நிலைகுலைந்து போயுள்ளன என்றனர்.

Tags:

Leave a Reply