சில்லரை வணிகத்தில் அன்னியநேரடி முதலீட்டை, திரும்ப பெறுவோம்மீண்டும் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குவந்தால், சில்லரை வணிகத்தில் அன்னியநேரடி முதலீட்டை, திரும்ப பெறுவோம்’ என, பா.ஜ. க., தலைவர், ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜ்நாத்சிங் மேலும் தெரிவித்ததாவது: எப்பொழு தெல்லாம் மொத்தவிலை குறியீட்டு எண் குறைகிறதோ, அப்போ தெல்லாம் பணவீக்கம் குறைந்துவிட்டதாக, மத்திய அரசு பொதுமக்களை ஏமாற்றி வருகிறது .

ஆனால், நுகர்வோர் விலைகுறியீட்டு எண் குறைவதாலேயே, மக்கள் அதிகம் பாதிக்க படுகின்றனர். அத்தியாவசிய பொருட்கள விலை ஏற்றத்த்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு ள்ளனர்.

விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த, மத்திய அரசு, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. மத்திய அரசின் இயலாமையினால் , நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், சில்லரைவணிகத்தில், அன்னியநேரடி முதலீட்டை திரும்பப்பெறுவோம்.என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply