பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்துவதோடு நம்கடமை முடிந்து விட்டதா?ஸ்ரீநகரில் நடந்த தீவிரவாத தாக்குதல்குறித்து நேற்று லோக்சபாவில் கடும் அமளிஏற்பட்டது. லோக்சபா கூடியதும் பயங்கரவாத தாக்குதலில் பலியான 5 ராணுவவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து இந்தவிவகாரம் தொடர்பாக எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பாஜக. தலைவர் சுஷ்மாஸ்வராஜ் இந்த விவகாரம்குறித்து அவைக்குவராத உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிக்கை விடவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறுகையில்,

ஒவ்வொரு முறையும் தீவிரவாத தாக்குதல் நடக்கும் போதும் அதில் பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்துவதோடு நம்கடமை முடிந்து விட்டதா? அவர்கள் இங்குவந்து நம் வீரர்களின் தலையை துண்டித்துவிட்டு செல்கின்றனர், விளையாட்டு வீரர்கள்போன்று வந்து தாக்குதல் நடத்துகின்றனர். இது இன்னும் எத்தனைகாலம் தொடரும் என்றார்.

இதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கும், ஷிண்டேவும் உடனே அவைக்கு வரவேண்டும் என கூறியும், தீவிரவாத தாக்குதலை கண்டித்தும் பாஜக உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து கோஷம் இட்டனர். ஷிண்டே மதியம்வந்து அறிக்கை தருவார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் உறுதியளித்த பிறகே அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

Leave a Reply