பரதேசி படத்தை பார்த்திட்டு இப்போது தான் வந்தேன் வரும் வழியெல்லாம் ஒரே யோசனை தான் காலை காட்சி பார்த்த நமது இணையதள புரட்சியாளர்கள் யாராவது இந்நேரத்திற்கு இயக்குனர் பாலாவிற்கு புணுள் மாட்டி இருப்பார்கள் RSS இயக்கத்திலும் சேர்த்திருப்பார்கள் ஹிந்துத்துவா முத்திரையும் குத்தி இருப்பாங்க

என்று நினைப்பிலே தான் வந்தேன் (இன்னும் அதை தேடவில்லை) பரதேசி படம் பல தாகத்தை என்னுள் ஏற்படுத்தி இருக்கு என்று சொல்லுவதை விட என்னுள் இருந்ததை படத்தில் பார்த்தேன்.

பார்பனர்கள் தான் தீண்டாமையை உருவாக்கி தனது வாழ்க்கையோடு கொண்டு இருந்தார்கள் வெள்ளைகாரனும் அவனது கிறிஸ்தவ மதமும் தான் தாழ்த்தப்பட்டவர்களை அரவணைத்து எல்லா மக்களையும் சமதள சமுதாயத்திற்கு அழைத்துவந்தது என்ற மாயையை பல பெரியோர்கள் உடைத்தாலும் இந்த திராவிட-கிறிஸ்தவ-இஸ்லாமிய-பொதுவுடைமை கும்பல்கள் பொய்யை உடைக்கப்பட்ட இடங்களில் அப்பப்போ பூச்சு வேலைகளை நித்தம் செய்து வந்து கொண்டு இருகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் திராவிட மாயையில் இருக்கும் ஊடங்களில் சக்தி வாய்ந்த ஊடகமான பெரிய திரையில் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என்று பொய் கூட சொல்ல முடியாது ஏன் என்றால் அப்படி பட்ட படம் தமிழில் வந்ததே இல்லை என்று தான் சொல்லணும் பெரிய திரையில் உள்ள திராவிட மாயையை இந்த படம் உடைத்து இருக்கு முக்கியமாக பாலா என்ற ஒரு மனிதனால் மட்டுமே முடியும் என்று நான் கடவுள் படத்தின் மூலமாக உணர்த்தியவர் இந்த பரதேசியிலும் செய்து இருக்கிறார் சுருக்கமாக சொல்லனும்னா இந்த படம் நமது முன்னோர்களின் இரத்தத்தையும் சதையையும் பிய்த்து நமது கண் முன்னே வைத்து கொடுத்திருகிறார் நாம் அன்றாடம் குடிக்கும் தேநீர் நமது முன்னோர்களின் இரத்தமே என்று தான் நினைக்க தோணுது அப்படியே நமது முன்னோர்களின் பாமரத்தனத்தை எப்படி மதமாற்றத்திற்கு உபயோக படுத்தினார்கள் என்று வெள்ளைகார துரையே நக்கல் செய்யும் அளவுக்கு இருக்கு.

மேலும் இந்த கதையில் வரும் மக்களை பார்க்கும் போது மலேயக தமிழர்களையும் சேர்த்தே தான் பார்க்க முடிகிறது என்னால்!! பாவம் பஞ்சம் பிழைக்க வெள்ளையன் கொழிக்க தேசம் விட்டு பரதேசம் சென்ற எம்மக்களை எம் மொழி பேசும் மக்களே தொட்ட காட்டான் என்று சிறுமை படுத்திய போதும் வெட்கமே இல்லாமல் சுரணை அற்று எம்மக்களை அருவெருப்பாக பார்த்த மக்களுக்கு நாம் இன்று குரல் கொடுத்திட்டு இருக்கிறோம் என்று என்னும் போது நாம் எவளவு மானம் கேட்டு இருக்கிறோம் என்று தான் தோன்றுகிறது

பாலா நான் வியக்கும் இயக்குனர்களில் ஒருவன்(ஒருவர் என்றால் அன்னியப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது ) நான் கடவுள் தான் என்னை அதிகமாக பாதித்த என் மொழி படம்
பாலாவுக்கு நடிகர்கள் தான் தேவை படுகிறதா என்ற சந்தேகம் இன்னும் எனக்கு இருக்கு

நன்றி ; மானுடத் குரு

Leave a Reply