சி.பி.ஐ., முன்னாள் இயக்குநர் அஸ்வினிகுமாரை நாகாலாந்து மாநில கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளதர்க்கு பாஜ தலைவர் ராஜ்நாத் சிங் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

பழுத்த அரசியல் தலைவர்கள், டி.ஜி.பி.,க்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளில் உயர் பதவிகளிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு மத்திய அரசின் விருப்பத்தின்பேரில் மாநில கவர்னர்பதவி அளிக்கப்பட்டு வருகிறது.

சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வினிகுமாரை நாகாலாந்து கவர்னராக மத்தியஅரசு நியமித்துள்ளது. சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ஒருவர் கவர்னராக நியமிக்க படுவது இதுவே முதன் முறை என கூறப்படுகிறது. மத்தியஅரசின் கைப்பாவையாக சி.பி.ஐ செயல் படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது .

இந்நிலையில் சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ஒருவரை கவர்னராக நியமித்தது பெரும்சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஸ்வினிகுமாரை கவர்னராக நியமித்திருப்பதற்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”நாட்டின் உயர்ந்தபுலனாய்பு அமைப்பில் அரசியலைபுகுத்த காங்கிரஸ் முயற்சித்துள்ளது. ஆரோக்கியமான ஜன நாயகத்தின் பாரம் பரியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. கவர்னர்பதவிக்கு நியமிக்கப்படுபவரின் தகுதிகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. ஆரோக்கியமான பாரம் பரியங்களை உடைத்து எறிவது ஜனநாயகத்துக்கு கேடுவிளைவிக்கும்” என்றார்.

Leave a Reply