ரோடு சைடு ஜர்னலிஸ்ட் களை --மன்னிப்போம்ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்றைய தேதியில், ஏன் கடந்த 2–3 வருடங்களாக "நல்லா வியாபாராம் ஆகும் சரக்கு" நரேந்திர மோடிதான்.. குறிப்பாக கடந்த 2012 டிசம்பருக்கு பிறகு வியாபாராம் படு ஜோர் ——-ஓஹோ-

அது மோடியை ஆதரித்து எழுதினாலும் சரி–எதிர்த்து எழுதினாலும் சரி–இரண்டையும் படிப்பவர்கள்–ஏராளம்

சமூக வலைத்தளங்களில் சுமார் 78 சதம்— மோடி ஆதரவாளர்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது.

இதை தெரிந்து கொண்டவர்களும், ஒருசில ஆங்கில பத்திரிக்கையாளர்களும், எங்கோ சந்து பொந்துகளில் சுற்றிக்கொண்டிருக்கும், ஒருசில "ரோடு சைடு ஜர்னலிஸ்ட் களை"– பிடித்து வந்து மோடியை எதிர்த்து எழுதி– நல்ல வியாபாரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகை வியாபார கட்டுரைகளில் ஒன்று இன்று (17.3.13 ) டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகியுள்ளது.–எழுதியவர் பெயர் குமாரி/திருமதி..ஜோதி மல்ஹோத்ரா —" தலைப்பு —" கரை படிந்த இருவர் .."

ஒன்று நரேந்திர மோடியாம்–இரண்டாமவர் மஹிந்த ராஜபக்ஷேவாம்..—இரண்டாமவரை புரிந்து கொள்ள முடிகிறது ..அவர் கரை பதிந்தவர் மட்டுமல்ல…முழுதும் கரையால் மட்டுமே ஆனவர்,,

படிக்கும்போதே எழுதியவருக்கே— அரைகுறை ஞானம்–என்பது அவரே வேண்டா வெறுப்பாக வியாபார நோக்கத்திற்காக எழுதுகிறார் —என்பது புரிகிறது.

பல்வேறு முறை 2002 குஜராத் கலவரத்தை பற்றியும், அதில் மோடியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்றும் "ஆணித்தரம்மான சாட்சியங்கள்,– புள்ளிவிவரங்கள்"– தந்த பிறகும், இப்படி எழுதியவர்கள் திருந்திய பாடு இல்லை..

எத்தனையோ கமிஷன்களும் கோர்ட் களும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு சன்பந்தம் இல்லை என்று  சொன்ன பிறகும்–இவர்கள்தான் மகாத்மா காந்திஜி கொலையில் இன்னும் ஆர்.எஸ்.எஸ்.சை சம்பந்த படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த "ஜந்துக்கள்" வியாபாரத்திற்காக எழுதுவதால் தண்டிக்க மனம் வரவில்லை..மன்னித்து விடுவோம் பாவம்–

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்  

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply