உலக நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்  தற்போது உலகநாடுகளிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வரும் இந்தியா, எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு ஆயுத சப்ளைசெய்ய வேண்டும் என்பதே தனதுகனவு என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

டில்லியில் இந்தியா டுடே ஏற்பாடு செய்திருந்த தலைவரின் உரை நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது . தலைமை பண்புக்கு என தனி மந்திரமோ தந்திரமோ கிடையாது. இதுபோன்ற பிதற்றல்களிலிருந்து நான் எப்போதுமே விலகியே இருப்பேன். குஜராத் மாநிலம் தனது திறமைக்காக பெருமைப்படுகிறது. குஜராத் பெருமைப்படும்போது இந்தியா ஏன் பெருமைப்படக் கூடாது?
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் என்ற பெயரை, வளர்ச்சி உத்தரவாத திட்டம் என்று பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசு தயாரா? இதன்மூலம் நாட்டிற்கு பெருமைசேர்க்கலாம். இதுவே தலைமை பண்பு.

குஜராத்தில் 2 கால்வாய் திட்டங்கள் செயல்பட்டு வருகிறத்து . ஒன்று முன்னாள் பிரதமர் நேருகாலத்தில் துவக்கப்பட்டது. அது இன்னும் கட்டுமான பணியிலேயே உள்ளது. மற்றொன்று, விவசாயிகளின் துணையோடு நாங்கள் உருவாக்கியுள்ள சுஜலாம்சுபலாம் திட்டம். இத்திட்டம் கடந்த 2 வருடங்களாக் செயல்பட்டு வருகிறது.அரசாங்கத்துக்கு தேவை சீரமைப்பு. அது சாதாரண மனிதனின் மன நிலையை பிரதி பலிப்பதாக இருக்கவேண்டும்.

நான் குஜராத் விவசாயிகளிடம் கூறியதெல்லாம், உங்களுக்குத் தேவை தண்ணீர். மின்சாரம் அல்ல. நான் உங்களுக்கு தண்ணீர் அளிப்பேன். அதனால் மின்சாரத்திற்காக போராட வேண்டாம் என விவசாயிகளை நோக்கி கூறும் மன வலிமை எனக்கு இருந்தது.

ஒருசிலர் போன்று வரவேண்டும் என்ற கனவு எனக்கில்லை. நான் ஒருமாநிலத்தின் முதல்வராக ஆவேன் என்று கூட நினைத்து பார்த்ததில்லை. இதற்காக எந்த ஒரு ஜோதிடரையும் சந்தித்து நான் முதல்வராக ஆவேனா எனகேட்டதும் இல்லை. பெரும்பாலான மக்கள் ஒருசிலர் போல் வரவேண்டும் என கனவுகண்டு அது முடியாமலேயே இறந்து விடுகின்றனர். அவர்களை பின்பற்ற எனக்கு விருப்பமில்லை.
கடந்த 40 வருடத்தில் , குஜராத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெற்றுள்ளன. ஆனால் கடந்த 2001ம் ஆண்டு முதலான எனது ஆட்சி காலத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெற்றுள்ளன.

எங்கள் மாநில அதிகாரிகளிடம் நான் கூறுவது தெல்லாம் , அரசியல் வாதிகளுக்கு பணியாற்றுவது உங்கள் வேலையல்ல. சாதாரண மக்களுக்காக உழையுங்கள் என்பதே என்று பேசினார்

Leave a Reply