ஐ.மு., கூட்டணி அரசிலிருந்து தி.மு.க., வெளியேற வேண்டும் இலங்கை தமிழர் விஷயத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசிலிருந்து தி.மு.க., வெளியேறவேண்டும் என பா.ஜ.க., வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, பா.ஜ., கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்த போது, ஐ.மு.,கூட்டணியின் ஒரு அங்கமாக தி.மு.க., இருந்தது. இன்றைய அரசிலும் திமுக பங்குவகிக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான செயல் பாட்டை கண்டித்து, ஐ.மு.,கூட்டணிக்கு அளித்துவரும் ஆதரவை, திமுக விலக்கி கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாத ஐ.மு., கூட்டணி அரசு, ஆட்சியில்தொடர உரிமை கிடையாது என அவர் கூறினார்.

Leave a Reply