பெண்களை பெருமளவில் காத்து கொண்டிருப்பது நம் தாய்ப்பால் வழியாக நமக்கு தரப்பட்ட சனாதன தர்மமே டெல்லியில் நடந்த கொடூர கற்பழிப்பும் , பின்னான கொலையும் இந்திய சமூகத்தையும் உலகையும் குலுக்கிய அதே நேரத்தில் மேலை நாடுகள் , வழக்கம் போல இந்தியாவை கற்பழிப்பு மற்றும் கொலைகளின் தேசமாக சித்தரித்து தங்கள் கலாசார மேட்டிமை எண்ணத்தை தூசு தட்டி

கொண்டனர் .. ஆனால் உண்மை என்ன ..? மேலை கலாசாரத்தின் முன் , பெண் தெய்வங்களை வணங்கும் , பெண்களை சகஉயிரியாக சக தர்மினியாக , மதிக்கும் நம் வேத கலாசாரம் தோற்று விட்டதா ..?

பதிவிற்க்குள் நுழையும் முன் ஒன்றை தெளிவு படுத்தி கொள்வோம்.. இந்த பதிவு பாரத தேசத்தில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களை நியாய படுத்துவதற்காகவோ .. இல்லை நீ மட்டும் ஒழுங்கா என்ற மொண்ணை எதிர்வாதத்ற்காகவோ எழுதபட்டது அல்ல … மாறாக சில பாவாடை சாமிகள் இந்திய கலாசாரம் குறித்து இகழ்நவிற்சியாக எழுதி கொண்டு இருப்பதை எதிர்த்து அவர்களுக்கு புரியவைக்க எழுதபட்டது ..

மேலை நாட்டினர் இந்த சமபவ்த்தை எப்படி பிரசுரித்தார்கள் என்பதற்க்கு ஒரு ஆதாரமான , ஆங்கில பத்திரிக்கையான THE TIMES UK -இல் லிபி புர்வெஸ் என்ற கட்டுரையாளர் டெல்லி கற்பழிப்பு குறித்தான பதிவு ஒன்றில் இப்படி எழுதுகிறார் '' டெல்லி கற்பழிப்பு சம்பவம் ஆன்மீகமயமான நம் ''பாலிவுட் கற்பனா விழுமியங்கள்'' –ஐ தகர்க்க போதுமானதாக இருக்கிறது .. மேலும் ஐரோப்பியர்கள் கொலைகார கழுதைபுலி தனமான ஆணாதிக்க இந்திய சமுதாயத்தை புரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கின்றனர். ''

ஆனால் தாங்கள் நாகரீக உச்சம் அடைந்து விட்டதாய் பறைசாற்றி கொள்ளும் அதே மேலை நாடுகளில் பெண்களின் நிலை என்ன ..? டெல்லியில் ஒவ்வொரு 14 மணி நேரத்திற்க்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யபடுகிறாள் அதாவது வருடத்திற்க்கு 625 பேர். அதே இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் –ன் மக்கள் தொகை டெல்லியை காட்டிலும் 3.5 மடங்கு அதிகம் அங்கு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகள் சுமார் 9509 .. அதாவது கிட்டதட்ட 400 சதவிகிதம் அதிகம்.

அதே ஜனவரி மாதம் பத்தாம் தியதி தி இண்டிபெண்டன்ட் பத்திர்க்கை மற்றொரு அதிர்ச்சி அளிக்கும் தகவலை தருகிறது .. பிரிட்டனில் சுமார் 95000 பாலியல் குற்றவாளிகளில் தண்டனை விதிக்கபடுபவர்கள் சுமார் 1070 பேர் மட்டும் தான் .. இந்தியாவின் மக்கள் தொகையை காட்டிலும் சுமார் இருபது மடங்கு குறைவான மக்கள் தொகையை கொண்டு இருப்பினும் வருடதிற்க்கு 95000 பாலியல் பலாத்கார வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன அதே இந்தியாவில் 2008-ல் பதிவான வழக்குகள் [ இந்திய புள்ளியல் துறையின் கணக்குபடி ] 20771 .

அதே நேரத்தில் அமெரிக்காவும் பிரிட்டனுக்கு சளைத்தது அல்ல .. குற்ற பதிவு செய்யபடாத பாலியல் குற்றங்களையும் சேர்த்தால் சுமார் ஐந்து சதவிகித குற்றவாளிகளே குறைந்த பட்சம் ஒரு நாள் சிறை தண்டனை அனுபவித்து இருக்கிரார்கள் [ National Center for Policy Analysis US Report no : 229 ].. ஆறில் ஒரு அமெரிக்க பெண் பாலியல் பலாத்கார முயற்சியோ அல்லது பாலியல் பலாத்காரத்தையோ அனுபவித்து இருக்கிறார்கள் [Colorodo Coalition Against Sexual Assault : statistics ]. 25 சதவிகித பருவ வயது பெண்கள் தங்கள் 14 ஆம் வயது முதல் ஒரு முறையேனும் பலாத்கார முயற்சிக்கோ அல்லது பலாத்காரத்திற்கோ ஆட்படுத்த பட்டு உள்ளனர்[Kolivas Elizebeth ; 2007 ].

சிந்தியுங்கள் நண்பர்களே … நாகரீகம் உச்சம் அடைந்த ப்ரிட்டனை போல இந்தியா இருந்தால் வருடத்திற்க்கு பதிவாக கூடிய பலாத்கார வழக்குகள் சுமார் 16 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருக்க கூடும் …

மனித மேம்பாட்டு குறியீடில் முதல் இடத்தில் இருக்கும் நார்வே =இல் 10 இல் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்க்கு உட்படுத்தபட்டுள்ளார். [நியு யார்க் டைம்ஸ் –அப்ரில் 17 2012 ] . மனித மேம்பாட்டு குறியீடில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்வீடன் 1 லட்சதிற்க்கு 63.5 பேரை பாலியல் பலாத்காரத்திற்க்கு இரையாக்குகிறது .. அமெரிக்கா லட்சத்திற்க்கு 137.5 பேரை இரையாக்குகிறது.. அதே இந்தியாவில் இதன் விகிதம் 1.8 பேர் மட்டுமே ..

ஆக உலக நிலவரங்கள் இப்படி இருக்கும் பொழுது நமது பெண்களை பெருமளவில் காத்து கொண்டிருப்பது நம் தாய்ப்பால் வழியாக நமக்கு தரப்பட்ட சனாதன தர்மமும் அதன் இந்திய கலாசரம் மட்டுமே தான் . சகோதரர்கள் கலங்க வேண்டாம் உலகின் கடைசி நிமிடம் வரை ஹிந்து மதம் வாழும், அதன் தர்மங்கள் வாழும். அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கும் வெறி பிடித்த சில மிருகங்களை களை எடுத்தாலே போதும் , நம் பெண்கள் பாதுகாப்பாக நடை போட முடியும் ..

பாரத் மாதா கி ஜெய் … ஜெய் ஸ்ரீராம் ..

நன்றி ; மானுடத் குரு

Leave a Reply