ஐ.மு.கூட்டணியிலிருந்து ஒரு வழியாக வெளியேறியது  தி.மு.க ஐ.மு.கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சென்னை அண்ணாஅறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.கருணாநிதி, மத்தியில் ஆளும் ஐ.மு., கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய போது, இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை மத்திய அரசு நீர்த்துப்போகச் செய்துவிட்டது . தமிழ் கலாசாரங்களை அழித் தொழிக்கும் செயல்களில் இலங்கைஅரசு ஈடுபட்டுவருகிறது. அதற்கு துணைபோகும் மத்திய அரசிலிருந்து திமுக விலக முடிவுசெய்துள்ளது என அவர் கூறினார்.

Leave a Reply