மத்திய அரசு தொடர்ந்து ஆட்சியிலிருப்பது தேசநலனுக்கு உகந்ததல்லகாங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்து திமுக விலகியுள்ளதை தொடர்ந்து மக்களவைத் தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் , இப்போதைய மத்திய அரசு தொடர்ந்து ஆட்சியிலிருப்பது தேசநலனுக்கு உகந்ததல்ல என்றும் பா.ஜ.க கருத்துத் தெரிவித்துள்ளது.

பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

இப்போதைய மத்திய அரசு தொடர்ந்து ஆட்சியிலிருப்பது தேசநலனுக்கு உகந்ததல்ல. இப்போது அவர்கள் பெரும் பான்மையையும் இழந்துவிட்டார்கள் .

தேர்தலை சந்திக்க பா.ஜ.க . எப்போதும் தயாராகவே இருக்கிறது . மத்திய அரசுக்கு நாட்டுநலனில் அக்கறையில்லை. இங்கும், அங்கும் ஓடி ஆட்சியை தக்கவைக்க ஆதரவுதிரட்டுவதிலேயே அவர்களின் காலம் கழிந்துவருகிறது

Leave a Reply