சிபிஐ., சோதனை சமாஜ்வாதி  பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு, மறைமுகமாக  விடப்பட்ட எச்சரிக்கை“ஸ்டாலின் வீட்டில், சிபிஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர், ராஜிவ் பிரதாப்ரூடி

செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டாலின் வீட்டில், சிபிஐ., மேற்கொண்ட சோதனை, சிபிஐ., அமைப்பை, காங்கிரஸ் தவறாக பயன்படுத்திவருகிறது என்று , நாங்கள் பலகாலமாக தெரிவித்து வரும் குற்றச்சாட்டை உறுதிசெய்கிறது. அரசை காப்பாற்ற, சிபிஐ.,யை மத்திய அரசு பயன் படுத்தியுள்ளது. திமுக., பொருளாளர், ஸ்டாலின் வீட்டில் நடத்தப்பட்டசோதனை மூலம், சமாஜ்வாதி மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு, மத்திய அரசு, மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

எங்களை விட்டு விலகினால், உங்களுக்கும், இதே நிலைதான் ஏற்படும் என, மறை முகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்று ராஜிவ் பிரதாப்ரூடி கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்

தமிழக பா.ஜ.க  தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.மு., கூட்டணி ஆட்சியில் மத்திய புலனாய்வுதுறை என்பது காங்கிரஸ் புலனாய்வு துறையாக மாற்றப்பட்டுள்ளது. பொதுவாகவே சிபிஐ. ஆளும் கட்சியால் எதிர்கட்சியை மிரட்ட தவறாக பயன்படுத்தப் படுவதாக பல கால கட்டங்களில் புகார் எழுத்துள்ளது.  சிபிஐ., சோதனை சமாஜ்வாதி  பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு, மறைமுகமாக  விடப்பட்ட எச்சரிக்கை

இந்தமாதிரி உயரிய அமைப்புகளை ஆளும் கட்சியினர் தங்கள் ஏவல்துறையாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. திமுக. கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்தது. மத்திய அமைச்சரவையிலும் பங்கேற்றது. அப்போதெல்லாம் இல்லாத நடவடிக்கை இன்று காலையில் திடீரென்று வெடித்ததுஎன்பது காங்கிரஸ் கட்சி அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தான் காட்டுகிறது.என்றார்

Leave a Reply