நிம்மதியான மறுவாழ்வு இந்தியாவில் பாஜக ஆட்சி மலர்ந்தால் மட்டுமே முடியும்  இலங்கையில் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கும் தமிழர்கள் 90%க்கும் மேல் ஹிந்துக்கள். அவர்கள் போர் நடந்து கொண்டிருந்தபோதும், அதற்குப் பின்னரும் ஹிந்து இயக்கங்கள் தங்களுக்குச் செய்த உதவியையும் அளித்து வரும் ஆதரவையும் மிகவும் பாராட்டுகின்றனர்.

தமிழகத்தில் வாய்ப்பந்தல் இட்டு வசைபாடுவதில் மட்டுமே தங்கள் வீரத்தைக் காட்டும் திராவிட இனவெறியாளர்கள் மற்றும் தமிழ் பிரிவினைவாதிகள் தங்களுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை என்பதையும், தங்கள் துன்பத்தில் அரசியல் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்கள் என்பதையும் தெளிவாக இலங்கை வாழ் தமிழ் ஹிந்துக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர்.

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர இயக்கங்கள் இலங்கையில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின விழாவை விமரிசையாகக் கொண்டாடியபோது அதில் ஆயிரக்கணக்கான இலங்கை வாழ் தமிழ் ஹிந்துக்கள் கலந்து கொண்டனர். அவ்விழாவைத் தடை செய்ய ராஜபக்சே அரசு முயற்சி செய்துத் தோற்றுப்போனது.

தங்களுக்கு நிம்மதியான மறுவாழ்வு வேண்டுமென்றால் இந்தியாவில் பாஜக ஆட்சி மலர்ந்தால் மட்டுமே முடியும் என்று இலங்கை வாழ் தமிழ் ஹிந்துக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அடுத்த தேர்தலில் மண்ணைக்கவ்வும் என்பது நிச்சயம். கடைசி நேரத்தில் இலங்கைப் பிரச்சனையைக் காரணம் காட்டி திமுக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியது அவ்வுண்மையை உறுதிப்படுத்துகிறது.

(மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ எப்படியாவது மத்தியில் உள்ள ஆட்சியில் அங்கம் வகிக்க வேண்டும் என்பது திமுகவின் "நிதி"க் கொள்கை. கடந்த 20 வருடமாக அனைத்து மத்திய அரசிலும் பங்கு கொண்டு வருகின்றது திமுக – இது வேறு விஷயம்)

இந்தியாவில், மத்தியில் பாஜக ஆட்சி அமைவதையும் இலங்க வாழ் தமிழ் ஹிந்துக்களின் நிம்மதியான மறுவாழ்வு இந்தியாவில் பாஜக ஆட்சி மலர்ந்தால் மட்டுமே முடியும்  பிரச்சனை தீர்வதையும் விரும்பாத அன்னிய சக்திகளின் தூண்டுதலினால், பாஜக தலைவர் அத்வானி பெயரில் முழுவதும் பொய்யான ஒரு அறிக்கையை இணையத்தில் முகநூலில் உலவ விடுகின்றனர் சில பிரிவினைவாத அயோக்கியர்கள்.

இலங்கை வாழ் சகோதரர்களின் நல்வாழ்வையும் இந்திய இறையாண்மைப் பாதுகாப்பையும் விரும்பும் தேசப் பற்றும் தமிழ் மொழிப்பற்றும் மிக்க மக்கள் அனைவரும் இந்த பொய்யர்களின் செய்தியை நிராகரிக்க வேண்டும்.

உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்… ஈழத்தமிழரின் மரணத்தின் மீது உங்கள் நாடகங்களை நடத்தாதீர்கள். ஈழத்தமிழருக்கு இங்குள்ள தமிழ் திராவிட கட்சிகள் துரோகம் செய்து கொண்டிருந்த போது கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அவர்கள் உயிர்காக்க குரல் கொடுத்த தலைவர் அத்வானி அவர்கள்.

நன்றி ; Harsh Thamizh

Leave a Reply