ஹோலி பண்டிகையை சீர்குலைக்க முயன்ற  தீவிரவாதிகளின் சதி முறியடிப்புஹோலி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் சதியை தில்லி போலீஸார் முறியடித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஹிஜ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச்சேர்ந்த சயீத்லியாகத் ஷா என்பவரை உ.பி., மாநிலம் கோரக்பூரில் தில்லி போலீஸின் தீவிரவாத தடுப்புப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து, தில்லி ஜாமாமசூதி அருகே இருக்கும் தங்கும் விடுதி அறையிலிருந்து ஒரு ஏ.கே. 56 ரக இயந்திரத் துப்பாக்கி, ஏராளமான கையெறிகுண்டுகள், வெடி மருந்துகள் கைப்பற்றப் பட்டன. மேலும் அவன் பாகிஸ்தானிலிருந்து தில்லி செல்லும்வரை அவனது பயணத்துக்கு தேவையான உதவிகளை இந்தியாவில் இருக்கும் ஹிஜ்புல் முஜாஹிதீன் ஆதரவாளர்கள் செய்து தந்துள்ளனர்.

தில்லி நீதிமன்றத்தில் கடந்த 21ம் தேதி ஆஜர்படுத்திய லியாகத்ஷாவை 15 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

Leave a Reply