காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த  பாஜக எம்எல்ஏ.,க்கள் தர்ணா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரி பாஜக எம்எல்ஏ.,க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். ஜம்முகாஷ்மீர் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க எம்எல்ஏ.க்கள் நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு பேரும் சட்டப் பேரவை கட்டிடம் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். தேசிய மாநாடு கட்சி காங்கிரஸ் கூட்டணி அரசின்கொள்கைகள் மாநிலத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தை உருவாக்கி உள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.

இதற்காக உமர்அப்துல்லா தலைமையிலான அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர் .

Leave a Reply