நவீண உலகில் மின்சாரம் இல்லாமல் ஒரு அணு கூட அசையாதே ? இருளில் மூழ்கியுள்ள தமிழகம். தமிழ்நாட்டையே கதிகலங்க வைத்துள்ள மின்வெட்டு பிரச்சினை. மானங்கெட்ட மத்திய அரசின் ஓர வஞ்சனையாலும், ஊழலில் புகழ் பெற்ற தி.மு.க. வின் வஞ்சகத்தாலும், தமிழக அரசின் செயலற்ற தன்மையாலும் இன்று தமிழகமே நிலைகுலைந்துள்ளது.

உலகில் இன்று முன்னேறிய தேசங்களில் ஒரு நிமிடம் கூட மின்வெட்டை நாம் பார்க்க முடியாது. ஆனால் தங்களை வளர்ந்த மாநிலம் என்று அழைத்துக் கொள்ளும் தமிழ்நாட்டிலோ இப்போது மின்வெட்டை அறிவிக்காமல் மின்சாரம் எத்தனை மணி நேரம் இருக்கும் என்று தான் அறிவிக்க வேண்டி உள்ளது. அதிமுகவின் மேல் உள்ள காழ்புணர்ச்சியால், அக்கட்சிக்கு மக்களிடம் வெறுப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற காரணத்தினால் வேண்டுமென்றே மத்திய அரசும் அதன் கூட்டனியான திமுகவும் எந்தவித உதவியும் செய்யாமல் இருக்கிறது. தன் குடும்பத்துக்கு ஏதாவது வேண்டுமென்றால் விமானம் பிடித்து தில்லி செல்லும் தமிழ் இனத் தலைவருக்கோ மின்சாரம் வழங்குமாறு மத்திய அரசை கேட்க நேரமில்லை.

தமிழக அரசோ மக்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத வண்ணம் மொட்டையாய் "இன்னும் ஆறு மாதத்தில் எல்லாம் சரியாகிவிடும்" என்ற ஒரு அறிக்கையை மட்டும் தந்து உள்ளது. எதிலுமே துணிவையும் விவேகத்தையும் காட்டும் முதலமைச்சர், உதயகுமார் மற்றும் அவரின் மிஷநரிக் கூட்டங்களை எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார். 18000 கோடி இந்திய மக்கள் பனத்தை விழுங்கியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை, படிக்காத உலகம் தெரியாத ஒரு ஆயிரம் பேரை வைத்துக் கொண்டு முட‌க்கி போடுகிறார். அவ்வப்போது நடு நடுவே அசிரிரி போல் வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்னும் ஒரு வாரத்தில் கூடங்குளம் செயல்பட தொடங்கும் என்று ஒரு வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். இது உலகில் வேறு எங்காவது நடக்குமா ?

இன்றைய நவீண உலகில் மின்சாரம் இல்லாமல் ஒரு அணு கூட அசையாதே ?

இதில் கொடுமை என்னவென்றால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவியரும்தான். இரவு முழுதும் மின்சாரம் இல்லாமல் தூக்கம் மின்சாரம்  கெட்டும், கொசு தொல்லையாலும் காலையில் மனநோயாளிகளை போல அலுவுலகத்துக்கும், பள்ளிக்கூடத்துக்கும் கிளம்புகிறார்கள்.

சென்னையை தவிர மிஞ்சிய தமிழகத்தின் அநாதை பகுதிகளில் ஏறக்குறைய‌ பதினாறு மணி நேர மின்வெட்டு இருக்கிறது. சுய தொழில் புரிந்தவர்கள் எல்லாம் தங்கள் இயந்திரங்களை விற்று விட்டு செய்வதறியாமல் இருக்கிறார்கள். ஜெனரேட்டர்களை வைத்துக் கொண்டு தொழில் புரியும் வசதி உடையவர்கள் உயர்ந்து வரும் டீசல் விலையால் கட்டுப்படியாகாமல் தொடர்ந்து நஷ்டத்தை தழுவி வருகிறார்கள். அறிவிக்கப்படாத மின்வெட்டால், உற்பத்தியை முறைப் படுத்த முடியாமல் தவிக்கின்றனர். சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவணங்களோ கிட்டத்தட்ட 24 மணி நேர மின்சாரத்தோடு கொழிக்கின்றனர். இது உலகில் வேறு எங்காவது நடக்குமா ?

மின்சார பிரச்சினையால் அவதிப்படாதவர்களே இல்லை. இட்லி மாவு அரைக்கும் குடும்பப் பெண்ணில் இருந்து ஜெராக்ஸ் கடை, ஐஸ்க்ரீம் கடை, பேக்கரிகள் என சின்ன சின்ன வியாபாரிகள் கூட பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

நீண்ட காலத்துக்கு உரிய எந்த திட்டங்களும் இல்லாமல் செல்லும் நமது போக்கைதான் என்னவென்று சொல்வது. நீண்ட காலத்துக்கு உண்டான தேவைகளை பற்றி திட்டமிடாமல், சின்ன சின்ன வட்டங்களுக்குள் மக்களின் கவனத்தை வைத்திருக்கும் கட்சிகள். கட்சி செய்திகளையும், கட்சி தலைவர்களையும் தலைமேல் தாங்கிக் கொண்டு அரசியலை வைத்து ஆதாயம் தேடும் கட்சித் தொண்டர்கள். மின்சார பிரச்சினை போன்ற மிகப்பெரிய அவலத்தை தட்டி கேட்க திராணியில்லாத பொதுமக்கள் என்று எங்குமே பார்க்க முடியாத ஒரு கூட்டத்தை தமிழகத்தில் தான் பார்க்கிறோம்.

மதவெறி பிடித்தவர் என்றும், மரண வியாபாரி என்றும் காங்கிரஸால் தூற்றப்படும் மோடிமின்சாரம்  அவர்களை தான் வியப்போடு பார்க்கிறேன். எத்தனை நீண்ட காலத் திட்டங்கள், எத்தனை வேகமான "அப்ரூவல்கள்", எத்தனை வேகத்தோடு அதை செயல்படுத்துகிறார்கள். நர்மதா கால்வாய் திட்டத்தை அத்தனை எதிர்ப்பிற்கும் இடையே அஞ்சாமல் செயல்படுத்தி இன்று குஜராத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் தடையற்ற மின்சாரத்தை தந்துள்ள அவரின் செயல்பாடுதான் என்ன ? தமிழகத்தில் என்று வரும் அப்படியொரு செயல்பாடு ?

இந்த உண்மைகளை சொன்னால் நம்மை காவி விசுவாசி என்பார்கள்.

Thanks; Enlightened Master

Leave a Reply