நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டது காங்கிரஸ் 55 ஆண்டுகாலமாக ஆட்சிசெய்து நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டது காங்கிரஸ் கட்சிக்கு இனி ஆட்சிசெய்யும் அதிகாரத்தை பெற தகுதியில்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார் .

டெல்லியில் கட்சியின் பேரணியில் கலந்து கொண்ட போது மேலும் இது குறித்து பேசியதாவது. விவசாயிகள் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், மின் வெட்டு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள்கூட காங்கிரஸ் ஆட்சியில் தீர்க்க படவில்லை.

ஆபத்தைநோக்கி சென்று கொண்டிருக்கும் நாட்டை காப்பாற்ற பாஜக.,வினால் மட்டுமே முடியும் . நாடுமுழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகளின்படி 2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் ஆட்சியை கைப்பற்ற போகிறது என்று முடிவுகள் வெளியாகியுள்ளது . பாஜக.,வினால் தான் சிறப்பான ஆட்சியை கொடுக்கமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply