மத்திய அரசுக்கு  தந்து வரும் ஆதரவு  விரைவில் வாபஸ் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை விரைவில் வாபஸ் பெற போவதாக உபி. முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரசைவிட பாஜக எவ்வளவோ மேல் என்ற நிலைபாட்டுக்கு அந்த

கட்சி வந்துவிட்டது. தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசுக்கு எங்களது சமாஜ்வாடி கட்சி வெளியிலிருந்து ஆதரவு தந்து வருகிறது. பெரும்பான்மையான ஊழல்களுக்கு காங்கிரசே காரணமாக உள்ளதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது .

எனவே நாங்கள் மத்தியஅரசுக்கு வெளியிலிருந்து தந்து வரும் ஆதரவை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளோம். எங்கள் கட்சி அதற்காக தயாராகிவருகிறது. ஆதரவு வாபஸ் அறிவிப்பை எப்போதுவெளியிடுவது என்பது குறித்து எங்கள் கட்சி தலைமை முடிவுசெய்யும். என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் கூறுகையில், காங்கிரஸ் அரசை விட பாஜக தலைமையிலான ஆட்சி சிறப்பாக இருந்தது என்றார்.

Leave a Reply