சட்ட பேரவைக்கான பா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் தயார் சட்ட பேரவைக்கான பா.ஜ.க., வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹுப்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது; கர்நாடக சட்டப்

பேரவை தேர்தல் மே 5ம் தேதி நடைபெறுகிறது . இதற்கான பாஜக வேட்ப்பாளர் பட்டியல் தயாராக உள்ளது.

பாஜக தேர்தல் பிரசாரகூட்டத்தில் மக்கள் திரண்டுவந்து கலந்து கொள்கின்றனர். பா.ஜ.க., ஆட்சியில் செய்த சாதனைகளை மக்கள் எண்ணிப் பார்க்கின்றனர். வரும் சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க.,விற்கு ஆதரவாக வாக்களிக்கும் மனநிலையில் அவர்கள் இருக்கின்றனர் .

தேர்தலில் அதிகதொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்வோம். பாஜக.,வில் சேருவதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், விவசாய சங்க பிரமுகருமான பாபா கௌடா பாட்டீல் விருப்பம் தெரிவித்திருக்கிறார் . இது பற்றி கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உரியமுடிவு எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply