சஞ்சய்தத்…மறைந்த பாலிவுட் சினிமா நடிகர்கள் சுனில்தத நர்கீஸ் தத்தின் மகன்.– இவரும் இந்தி சினிமா நடிகர பிறப்பால் இஸ்லாமியர்..1993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பும் அதை தொடர்ந்த கலவரமும் உச்சத்தில் இருந்த போது தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக்கொள்ள வேண்டி ஒரு ஏகே.56 ரக தானியங்கி துப்பாக்கியை சட்டத்திற்கு புரம்பாக வாங்கி வைத்துக்கொண்டார்..

போலீஸிடம் இருந்து ..துப்பாக்கியை மறைக்கவும் அழிக்கவும், அப்போது மும்பையில் குண்டுவைத்த இப்போது ஆயுள் தண்டனை பெற்று கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் குற்றவாளியின் உதவிபெற்றார் என்பது போளீஸ் தரப்பு ஆதாரம் மற்றும் குற்றச்சாட்டு..

இவருடைய தண்டனையை 6 ஆண்டில் இருந்து 5 ஆண்டாக சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது..இது போதாது..இவரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டுமென கடந்த இரண்டு நாளாக அத்தனை மீடியாவிலும் விவாதங்கள்..

இதில் வேடிக்கை என்னவென்றால்…சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியும், இன்னாள் பத்திரிக்கை கவின்சில் சேர்மனுமான திரு.மார்க்கெண்டேய கட்ஜூ..அவர்கள், மாநில கவர்னரும் ,இந்திய ஜனாதிபதியும், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, மன்னித்து சஞ்சய் தத்தைவிடுதலை செய்ய்யவேண்டுமாம்..இதர்கு சொன்ன காரணம் இதை விட மேலும் "ஜோக்கானது".."முன்னாபாய்..எம்பிபிஎஸ்..என்னும் சினிமாவில், சஞ்சய்தத்..ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்வதால் அவரது சமூக சேவையை அங்கீகரித்து, மன்னிப்பு கொடுக்க வேண்டுமாம்..

இதற்கு ஒய்.பி. சிங்.என்னும் முன்னாள் ஐ.பி.எஸ்.ஆஃபிசர் சொன்ன பதில் சரியான பதிலடி…கல்நாயக் என்னும் படத்தில் இதே சஞ்சய் தத் கொள்லைக்காரனாக வர்கிறாரே..அதற்காக தண்டனையை இன்னும் சில ஆண்டு கூட்டலாமா? என்பதுதான்..

இதவிட இன்னும் சுவாரசியம்..ராகுல் காந்தியின் இதயக்கனி—சோனியாகாந்தியின் செல்லப்பிராணி…திக் விஜய் சிங் திருவாய் மலர்ந்தருளியதுதான்..சஞ்சய் தத் தவறு செய்திருக்கலாம்..ஆனால் அவர் பயங்கர வாதி இல்லை ஆகவே அவரை மன்னித்து விடுதலை செய்து விடலாம்–எனபது தான்..

நம்முடைய சூப்பர் ஸ்டரும் அவருடைய பங்கிற்கு –சஞ்சய் தத் மனம் திருந்தி இனி நல்வாழ்வு வாழ இந்த விடுதலை உதவி செய்யும் என்கிறார்..

முன்னாள் சட்ட அமைச்சார் சாந்தி பூஷன் அவர்கள் சஞ்சய் தத்துக்கு வக்காலத்து வாங்கி — இன்றைய (26.3.13 ) இந்து பத்திரிக்கையில் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் பல்வேறு பகுதிகளையும், சட்டத்தின் பல்வேறு ஷரத்துக்களையும், கோடிட்டு காட்டி, சஞ்சய் தத்தை விடுவிக்க வேண்டும், மன்னிக்கவேண்டும்,—என்கிறார்.

ஆக ஒரு பெரும் பூர்ஷ்வாக்களின் கூட்டம், பணக்காரர்களின், மந்தை –சஞ்சய்தத்தை சட்டத்திற்கு அப்பார் பட்டவராக காட்டி—கவர்னரிந்-ஜனாதிபதியிந்-அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்க முயல்கிறது..

ஏகே56 ரக இயந்திர துப்பாக்கியால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக்கொல்ல முடியும்..இது போரில் மற்றும் எல்லை பாது காப்பு படையினரால் மட்டுமே பயன் படுத்துவது..இதை பாதுகாப்புக்காக சஞ்சய் தத் வைத்திருந்தார் என்றால்…..ஒருவேளை..ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால்….தற்காப்புக்காக நூற்றுக்கணக்கனவர்கள் கொல்லப்பட்டுருப்பார்களே…இது சரியா…

நாளை ஏதாவது கலவரம் நடக்கும் பகுதிகளில், மக்கள் தங்கள் பாதுகப்புக்காக, ஒரு பத்து கையெரி குண்டும், ஒரு இருபது ஜெலட்டின் குண்டுகளும், ஒரு பதினந்து நாட்டு துப்பாக்கியும், வைத்துக்கொண்டால், போலீஸ் ரெய்டில் பிடி பட்டால், ..அவர்களை விடுதலை செய்யச் சொல்லி" இந்து பத்திரிக்கை" யாரிடமாவது கட்டுரை வாங்கி பிரசுரிக்குமா?–

என்.டி.டி.வி.யும், மற்ர பத்திரிக்கைகளும், "குழு விவாதங்கள் ந்டத்தி –விடுவிக்க சொல்லுமா??–

இங்கு கல்வியில், , வேலைவாய்ப்பில், , மருத்துவ சிகிச்சையில்,, ஏழைக்கு சம  வாய்ப்பில்லை—இடமில்லை—வசதியானவனுக்கு மட்டுமே வாய்ப்புக்கள்..என்னும் நிலை..

நீதியுமே…பணக்காரனுக்கும்—பிரபலங்களுக்கும் –விலை போய் விட்டதா?..?

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply