அத்வானி செல்லும் பாதையில் வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது பாரதிய ஜனதா தலைவர் அத்வானி செல்லும் பாதையில் வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யப் பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தர்வீஸ்மைதீன், சையத், முஸ்தபா உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்ற 2011 அக்டோபர் 28ம் தேதி திருமங்கலம் அருகே தரை பாலத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்த வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. தரைப் பாலத்தில் வைக்க பட்டிருந்த வெடி குண்டுகள் முன்னதாகவே கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும்அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆலம்பட்டி வழியாக தென் காசிக்கு அத்வானி ரதயாத்திரை செல்லும்போது இந்த சம்பவம் நடந்தது.

Leave a Reply