பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் பசு கொலை தடைச்சட்டம் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் பசு கொலை தடைச்சட்டம், பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும், என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் பேசியதாவது ; நரேந்திர மோடியின் அரசியல் செயல் பாடுகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது, தற்போது ஆளும் காங்கிரஸ்அரசால் மக்களுக்கு துன்பமே கிடைத்துள்ளது . நாட்டின் தவறான வெளியுறவு கொள்கையால் சிறியநாடுகளான வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட குட்டி நாடுகள் கூட இந்தியாவை மதிப்பதில்லை . வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள ரூ.25லட்சம் கோடி கருப்புப்பணத்தை 100 நாட்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய ஐ.மு., கூட்டணி அரசு, அதற்கான சிறு முயற்சிகளை -கூட மத்திய அரசு எடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply