காங்கிரஸ் கட்சி எதைசெய்தாலும் தேர்தல் ஆதாயத்தை மனதில் கொண்டே செய்கிறது. அவர்கள் மோசடிசெய்வதில் புத்திசாலிகள் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் பேசியதாவது ; காங்கிரஸ் கட்சி எதைசெய்தாலும் தேர்தல் ஆதாயத்தை மனதில்வைத்தே செய்துவருகிறது. முன்னர் விவசாய கடன்களை தள்ளுபடிசெய்வதாக அறிவித்தது. பின்னாடியே தேர்தலுக்கான அறிவிப்பும்வந்தது. அந்ததேர்தலில் காங்கிரஸ் வெற்றியும் பெற்றது.

அவர்கள் மீண்டும் இதை செய்வார்கள். அவர்கள் மோசடிசெய்வதில் புத்திசாலிகள். நேரம் வரும்போது மக்கள் முதுகில் ஏறி சவாரிசெய்வதிலும் வல்லவர்கள் என்று அவர் கூறினார்.

Leave a Reply