இந்தியாவில் உள்ள தூதர் எனும் அந்தஸ்த்தையே மறந்து இந்தியாவிற்குள் உள்நாட்டு குழப்பத்தை விளைவிக்கும் விதமாக செயல்பட்டுவரும் கரியவாஸம் மீது சரியான நடவடிக்கை எடுப்பதோடு ஏன் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கூடாது

என்பதையும் இந்தியா சிந்திக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை பிரச்சனையை அழுத்தமுடன் முன்னெடுத்துசெல்லும் வகையில் இலங்கையில் நடைபெற்ற இன படுகொலை மற்றும் போர் குற்றங்கள் குறித்து சுதந்திரமான நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்தபடவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்ட மன்றத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளதை தமிழக பாரதிய ஜனதா வரவேற்றுள்ளது என்றும் தெரிவித்தார்

Tags:

Leave a Reply