மூன்றாவது அணிக்கு எதிர் காலம் இல்லை மூன்றாவது அணிக்கு எதிர் காலம் இல்லை. சந்தர்ப்ப வாத கூட்டணி அல்லது அதிகாரத்தை பயன் படுத்தியோ நாட்டில் தற்போதிருக்கும் எந்த பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது என்று பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர்ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; முலாயம்சிங் 3வது அணியை அமைக்க திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், யாரெல்லாம் அதில் இருப்பார்கள், என்ன திட்டங்கள் வகுக்கப் படும்? என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. எனவே, 3வது அணிக்கு எதிர் காலம் இல்லை. சந்தர்ப்பவாத கூட்டணியாலோ அல்லது அதிகாரத்தை பயன்படுத்துவதலோ நாட்டில் தற்போதுள்ள எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது.

சீரான செயல் திட்டங்கள் இல்லாத ஐ.மு., கூட்டணி அரசினால் சாதாரணமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம் அதிகரித்து உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு, சிபிஐ. அமைப்பை தவறாக பயன்படுத்துகிறது. சிபிஐ. மட்டுமின்றி, சிவிசி, சிஏஜி. போன்ற அமைப்புகளும் அரசின் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படவேண்டும். டெல்லி போலீஸ் சட்ட ஆதிக்கத்திலிருந்து சிபிஐ. நீக்கப்பட்டு, புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றார்.

Leave a Reply