பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும் ஐ.மு., கூட்டணியிலிருந்து திமுக. விலகி, அரசுக்கு தந்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதால், பெரும் பான்மையை இழந்த மத்திய அரசு பதவி விலகவேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-

மன்மோகன்சிங் அரசு மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது . அவர்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பயன் படுத்தி ஆட்சியில் தொடர்கிறார்கள். கடந்த வருடம் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவை வாபஸ்பெற்ற போது அரசு முதலில் மைனாரிட்டி ஆனது. இப்போது திமுக.வும் விலகியுள்ளது. எனவே, இந்த அரசு பதவியில்நீடிக்க உரிமையில்லை. இந்த அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply