அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக் மனித உரிமை ஆணைய உறுப்பினர்   பதவிகளை வழங்கக்கூடாது தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் புதிய உறுப்பினர்களை தேர்வுசெய்வது குறித்து நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவர்களான சுஷ்மாஸ்வராஜும், அருண்ஜேட்லியும் பிரதமரை சந்தித்து விவாதித்தனர்.

தில்லியில் வெள்ளிக் கிழமை நடந்த இந்த கூட்டத்தில், தேர்வுக்குழுவின் மற்ற உறுப்பினர்களான உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, மக்களவைத் தலைவர் மீராகுமார், மாநிலங்களவை துணை தலைவர் பிஜே.குரியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

மனித உரிமை ஆணைய உறுப்பினருக்கான பதவிகளை முன்னாள் அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக் வழங்கக்கூடாது என பாஜக. வலியுறுத்தி வருகிறது. இது எதிர்க்கட்சி மற்றும் அரசு தரப்புக்கும் இடையில் சிக்கலான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply