பா.ஜ.க.,வின் உயர் மட்ட குழுவான  ஆட்சிமன்றக் குழு அறிவிப்பு பா.ஜ.க.,வின் உயர் மட்ட குழுவான ஆட்சிமன்றக் குழு நியமிக்க பட்டுள்ளது.2014-ம் வருடம் மக்களவை தேர்தலுக்கான பாஜக ஆட்சி மன்றக் குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமிக்க பட்டுள்ளனர்.

11 பேர்கள் கொண்ட இந்த ஆட்சி மன்றக்குழுவில் 6 ஆண்டுகளுக்கு பின் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இடம் பெற்றுள்ளார்.

மேலும் வருண்காந்தி, ராஜிவ் பிரதாப் ரூடி, அமித்ஷா, உமாபாரதி, முக்தர் அப்பாஸ் நக்வி, சிபி. தாக்கூர், சதானந்த கவுடா, ஸ்ரீமதி இராணி, உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். பாஜக ஆட்சி மன்றக் குழுவில் தமிழகத்தை சேர்ந்த இல. கணேசன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்‌கை குழு உறுப்பினராகவும், தமிழிசை சவுந்தர் ராஜன், ‌தேசியசெயலராகவும் நியமிக்க பட்டுள்ளனர்.

இவை தவிர 19 பேர்கொண்ட தேர்தல் குழுவையும் பா.ஜ.க., தலைமை அறிவித்துள்ளது. இதன் தலைவராக ராஜ்நாத்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த குழுவில் வாஜ்பாய், அத்வானி, நரேந்திரமோடி, அருண் ஜேட்லி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply