பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்த வேண்டும் மக்களவை பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்தவேண்டும் என ஆன்மிககுரு பாபா ராம் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியால் மத்தியில் மீண்டும் ஆட்சிக்குவர முடியாது. காங்கிரஸ் ஆட்சியும், கொள்கையும் மக்கள்நலனுக்கு விரோதமாகவே உள்ளது.

எனவே பா.ஜ.க., கூடுதல் முக்கியத்துவம்பெற வாய்ப்புள்ளது. தேர்தலின்போது நரேந்திரமோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்வதன் மூலம் பா.ஜ.க., அதிக வெற்றிவாய்ப்பை பெறமுடியும் என்று கூறினார்.

Leave a Reply