லோக்சபாவுக்கு இந்த வருடமே தேர்தல் நடக்கலாம் லோக்சபாவுக்கு இந்த வருடமே தேர்தல் நடக்கலாம் அந்த ‌தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

உ.பி. மாநிலம் சி்த்ர கூட் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது; பார்லிமெட்டிற்கு இந்தாண்டு(2013) அக்டோபர், நவம்பர் மதத்திலேயே பொதுத்தேர்தல் நடக்கலாம்.

நாங்கள் பொதுப் படையாக பேசியதை சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் ஆமோதித்து கூறியுள்ளார். அவரது கருத்து படியும் முன்கூட்டியே தேர்தல்நடக்கலாம்.

மேலும் தற்ப்போது 5 மாநிலங்களுக்கு சட்ட சபை தேர்தல்கள் நடைபெறுகிறது . அவற்றுடன்சேர்த்து பார்லிமென்ட் பொதுத் தேர்தல் நடக்கும். அப்படி தேர்தல் நடந்தால் அதில் காங்கிரசுக்கும் கட்சிக்கும், பா.ஜ.க.,விற்கும்தான் நேரடி மோதலாக இருக்கும். இதில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியைபிடிக்கும் என்றார்.

Leave a Reply