இலங்கை பிரச்சினைகுறித்து சென்னையில் பாஜக சிறப்புகூட்டம்   இலங்கை பிரச்சினைகுறித்து பாஜக சிறப்புகூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்

கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர்களது வாழ்வுநிலை, சம உரிமையுடன் சுதந்திரமாக வாழும்உரிமை, மறு வாழ்விற்கான நம்முடைய உதவி என்று பல்வேறு கோணங்களில் உறுதியான, நிலைப்பாட்டுடன் மத்திய அரசு செயல்பட வலியுறுத்தியும், இந்திய தமிழகமீனவர்கள் நமது கடல்எல்லையில் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதும், தாக்கப் படுவதும் தொடர்வதை கண்டித்தும் பாஜக குரல்கொடுத்து வருகிறது.

இந்த பிரச்சினைகளில் மத்தியஅரசு தோல்வி யடைந்துள்ளதை மக்களுக்கு எடுத்து கூறும் விதமாகவும், எடுக்கவேண்டிய ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் மார்ச் 19ம் தேதி முதல் தமிழகமெங்கும் மாவட்டம் தோறும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறோம்.

இலங்கை தமிழர்பிரச்சனை இந்திய தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றி பாஜக.,வின் மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுதுறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான யஷ்வந்த்சின்கா இன்று மாலை 6 மணி அளவில் இராய பேட்டை ஹேமமாலினி திருமண மண்டபத்தில் நடக்க இருக்கும் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply