ஒரு கட்சியின் மீது மக்கள் ஒரு முறை நம்பிக்கை இழந்துவிட்டார்கள் எனில் , மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறுவது கடினம் என்று பாஜக . தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு நவம்பரில் தேர்தல் நடக்கும் என்று பாஜ. தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பாகுதிகளை பார்வையிட்ட அவர் பிறகு பாஜக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசியதாவது: மக்களவைக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடக்கலாம் என்று நம்புகிறேன். எனவே எந்நேரம் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும்.

அக்டோபர் – நவம்பரில் 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறஇருக்கிறது. மகாராஷ்டிராவில் அடுத்த ஆண்டுதான் சட்டப் பேரவைக்கு தேர்தல் வரும் என்றாலும் அந்ததேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயாராக இருக்கவேண்டும்.

கடந்த 15 வருடமாக மகாராஷ்டிராவில் நாம் ஆட்சியில் இல்லை. இத்தனை வருடங்கள் ஆட்சிக்கு வராமல் இருப்பது மிகமோசமான விளைவுகளை உருவக்கும் . நம்மால் மீண்டும் ஆட்சிக்குவரவே முடியாது என மக்கள் நினைக்கதொடங்கி விடுவார்கள். ஒருகட்சி மீது மக்கள் ஒரு முறை நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றால், மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறுவது மிககடினம். என்று ராஜ்நாத் சிங் பேசினார்.

Leave a Reply