காங்கிரஸ்சை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல காங்கிரஸ்சை எதிர்ப்பது அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில் அது தன்னை எதிர்க்கும் யாரை வேண்டுமானாலும் சிறைக்கு அனுப்பும் என சமாஜ்வாடிகட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது , காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது ஒன்றும் எளிதல்ல. அப்படியே எதிர்த்தாலும் அவர்களை சிபிஐ துரத்தும்.

மத்தியஅரசுக்கு ஆயிரம்கைகள் உள்ளன. அது சி.பி.ஐ.,யை பயன் படுத்தி யாரை வேண்டும் என்றாலும் சிறையில்தள்ளும் என்றார்.

Leave a Reply