ராகுல் காந்தி ஒருகுழப்பமான தலைவர் ராகுல் காந்தி ஒருகுழப்பமான தலைவர் , அவரது பேச்சு மற்றும் செயல்பாட்டில் நரேந்திரமோடி பற்றிய பயமிருப்பது தெளிவாக தெரிகிறது என்று பாஜக செய்திதொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; . காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி,சி.ஐ.ஐ. நிகழ்ச்சியில் ஆற்றிய உரை கண்டிக்க தக்கது . தேசிய அரசியலில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இறங்கியுள்ளதால் பயந்து போன ராகுல்காந்தி குழம்பிப் போய் உளறுகிறார் . ஊழல் மற்றும் விலைவாசி உயர்வை தடுத்துநிறுத்த ராகுல்காந்தியின் யூகங்களை கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் ஐ.மு.,கூட்டணி ஏன் கவனத்தில் கொள்ளவில்லை . ராகுல்காந்தி அவரது சொந்த உலகத்தில் வாழ்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது .

ஐ.மு.,கூட்டணி ஆட்சியில் ஊழல் பற்றியோ , உயர்ந்துவரும் பணவீக்கம் குறித்தோ ராகுல்காந்தி எதுவும் பேசவில்லை . ஐ.மு., கூட்டணியின் 9 ஆண்டுகால ஆட்சியில் என்ன நடந்தது என்பது பற்றி ராகுல் எடுத்துக் கூற வேண்டும்.

Leave a Reply