கறுப்பு பணத்தை மீட்க கோரி யாத்திரைசென்றேன் ஆனால் ஒரு ரூபாயை  கூட  மீட்கவில்லை கறுப்பு பணத்தை மீட்க கோரி நான் யாத்திரைசென்றேன். ஆனால் இதுவரைக்கும் ஒரு ரூபாயை கூட இந்த அரசு மீட்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் சித்ரகூட் நகரில் மாநில பா.ஜ.க செயற் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்கவந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. இந்த வருடம் டெல்லி, கர்நாடகா, சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கான சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது . அங்கு பா.ஜ.க., வுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் நேரடிபோட்டி. இந்ததேர்தல்களில் பா.ஜ.க.,வுக்கு நல்ல வாய்ப்புள்ளது. இந்ததேர்தல் முடிந்தவுடன், இந்த வருடமே பாராளுமன்றத்துக்கு தேர்தல்வரும். பாராளுமன்றத்துக்கு எப்போது தேர்தல்வந்தாலும், காங்கிரஸ் தோற்பது உறுதி.

இந்தியாவில் இருகட்சி ஆட்சிமுறை இல்லாமலிருக்கலாம். ஆனால், பா.ஜ.க எடுத்த முயற்சிகளால், நாடு இருகட்சி அரசியலுக்கு மாறிவிட்டது.
கடந்த மூன்று வருடமாக ஊழல்தான் முக்கிய பிரச்சனையாகிவிட்டது. எத்தனையோ ஊழல்கள் வெளிவந்துவிட்டன. மந்திரிகள்கூட ஊழல் வழக்குகளில் ஜெயிலுக்கு சென்றுவிட்டனர்.

இந்த ஊழல்களால், சாதாரண மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த அரசிலிருந்து விடுபடவிரும்புகின்றனர். விலைவாசி உயர்வும் முதுகெலும்பை முறித்துவிட்டதால், மக்கள் மாற்றம்காண விரும்புகின்றனர். கறுப்புபணத்தை மீட்கக்கோரி யாத்திரை சென்றேன். ஆனால் ஒருரூபாய் கூட மீட்கப்படவில்லை என்று அத்வானி கூறினார்.

Leave a Reply