ஆட்சி நிர்வாகத்தில் இருப்போருக்கு கொள்கை தெளிவு அவசியம் ஐ.மு.கூட்டணி அரசின் பொருளாதாரகொள்கையே எல்லா நெருக்கடிகளுக்கும் காரணம் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் அரசியல் திறமை நம்பகத்தன்மை உள்ளதாக இருக்கவேண்டும் . ஆட்சி நிர்வாகத்தில் இருப்போருக்கு கொள்கை தெளிவு அவசியம்.

தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒன்பது சதவிதமாக உயர்த்த அரசிடம் என்ன திட்டம் உள்ளது? . அரசின் தவறான நிர்வாகத்தினால் பல துறைகள் ஊழலில் சிக்கித் தவிக்கிறது . ஐ.மு.கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகளே நெருக்கடிக்கு முக்கிய கரணம் என்று தெரிவித்தார் .

Leave a Reply