பகல் கனவுகாண அனைவருக்கும் உரிமையுண்டு3வது முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருப்பது “பகல் கனவு’ என்று பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கிண்டலடித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங், செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், மூன்றாவது முறையாக பிரதமர் பதவிவகிக்க வாய்ப்புண்டு. இல்லாவிடில், அப்படியொருவாய்ப்பு வராமலும் போகலாம் என தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த கருத்து குறித்து பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: . ஆனால், பண வீக்கத்தினால் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஐ.மு.,கூட்டணியை அவர்கள் ஏற்கெனவே ஓரங்கட்டிவிட்டனர்.

பல்வேறு ஊழல்களினால் மக்களுக்கு இந்தஅரசு துரோகம் இழைத்துள்ளது. தங்களின் உழைப்பு சுரண்ட பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் தொழிலார்கள் உணர்ந்துவருகின்றனர். எனவே, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply