பா.ஜ.க.வின் மூலம் நாடு பெரியளவில் ஆதாயம் அடையவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் பா.ஜ.க.வின் மூலம் நாடு பெரியளவில் ஆதாயம் அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பாஜக.வின் 33வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது; சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் என்னை புகழ்ந்து பேசிய போது அதை மக்கள் வரவேற்றனர். சரியான ஒன்றை யார்சொன்னாலும் உலகம் அதை வரவேற்று ஏற்றுக்கொள்ளும். நல்லதை வரவேற்க நாம் தயங்க கூடாது. தாழ்வு மனப் பான்மை கூடாது. அயோத்தி விவகாரத்தில் பாஜக. முன்னர் எடுத்தநிலைக்காக நான் வருத்தபடவில்லை. மாறாக, பெருமிதம்கொள்கிறேன்.

கட்சிக்குள் ஒழுக்கக் கேடு, ஊழல் போன்றவற்றுக்கு இடம் தந்து விடக்கூடாது. பாஜக.வின் மூலம் இந்நாடு பெரியளவில் ஆதாயம் அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி வரும்வேளையில் உள்கட்சி ஒழுக்கம், ஊழலற்ற தன்மை போன்றவற்றை அவசியமாக கடைபிடிக்கவேண்டும் என்றார்.

Leave a Reply