குஜராத்தின் அகமதாபாத்தில் பா.ஜ.க.,வின் 33வது ஆண்டு தொடக்கவிழாவை, பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய ராஜ்நாத்சிங் பிரதம்ர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பமில்லை, அதை ஆட்சிமன்றக்குழு முடிவுசெய்யும் . காங்கிரஸ் மக்களிடையே செல்வாக்கை இழந்து வருகிறது , நரேந்திரமோடி மக்கள் செல்வாக்குமிக்க தலைவர் .

வரும் 2014ல் நடக்க உள்ள பொதுதேர்தலில் வெற்றிபெற்று பா.ஜ.க., நிச்சயம் ஆட்சியைபிடிக்கும் . நவ்ரங்புரா மைதானத்தில் நடந்த இவ்விழாவில் ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர்.

பா.ஜ.க ஆட்சி மன்றக் குழுவில் மீண்டும் மோடி நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply