காங்கிரஸ்க்கு இந்தியா தேன்கூடு , எங்களுக்கோ  தாய் காங்கிரஸ்க்கு இந்தியா ஒரு தேன்கூடு போன்றது. ஆனால் எங்களுக்கோ தாய் போன்றது, இந்தியர்களின் தலை யெழுத்தை மாற்றவே பாரதிய ஜனதா பிறந்துள்ளது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, சி.பி.ஐ.,யை பார்த்து பாஜக அஞ்ச வில்லை. காங்கிரஸ் சி.பி.ஐ.,யை பயன் படுத்தி பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கொடுமை படுத்துகிறது. இருப்பினும் பாஜக தொண்டர்களை மிரட்டும்முயற்சி தோல்வியுறும்.

இந்திய தொழில்வர்த்தக கூட்டமைப்பின் வருட கூட்டத்தில் காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரை ஏமாற்றம் தருகிறது.

காங்கிரஸ கட்சிக்கு இந்தியா ஒரு தேன் கூடு போன்றது. ஆனால் எங்களுக்கு தாய்போன்றது. காங்கிரஸ் திருந்தும் என காத்திருக்க வேண்டாம். அது ஒருபோதும் நடக்காது. பா.ஜ.க.,வுக்கும், காங்கிரஸக்கும் இடையே பெரியவித்தியாசம் உண்டு .

இரு கட்சிகளின் சிந்தனைகளிலும் வேறுபாடு உண்டு . நாட்டில் தண்ணீர் பிரச்சனை இருக்கிறது என்பதுகூட அமைச்சர்களுக்கு தெரியவில்லை. இந்தியா எங்களுக்கு தாய்போன்றது, தாயின் வலியை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் இருக்கும் கோடிக் கணக்கான மக்களின் தலையெழுத்தை மாற்றவே பா.ஜ.க., பிறந்தது என்றார்.

Leave a Reply