பெண்களின் சத்தியை நாம் உணர வேண்டும் ஆண்களைவிட இருபடி முன்னே பெண்கள் உள்ளனர். எனவே பெண்களின் சத்தியை நாம் உணரவேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற தொழில்வர்த்தக மகளிர் அமைப்பில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது ; பெண்களின் சக்தியை பயன் படுத்தி வெற்றிகாண்பதில் குஜராத் மற்றமாநிலங்களுக்கு உதாரணமாக உள்ளது .

அதாவது, பெண்களின் பெயரில் சொத்துக்கள் பதிவு செய்ய பட்டால், அதற்கு பதிவுவரி விலக்கு அளித்துள்ளது குஜராத் அரசு. மேலும், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது தாயின்பெயரை மட்டுமே கேட்கிறோம், தந்தையின்பெயரை அல்ல .

நமது கலாச்சாரத்தில் தாய்க்கு மிகமுக்கிய இடம் உண்டு . ஆனால், பல்வேறு மோசமானவிஷயங்கள், நமது சமூகத்தை சீரழித்து விட்டது. 18ம் நூற்றாண்டில் இருந்த பெண் சிசுக்கொலை இப்போதும் மீண்டும் தொடங்கிவிட்டது . சிலநேரங்களில் இந்தியாவில் 18ம் நூற்றாண்டில் இருந்ததைவிட தற்போது மிகமோசமான சூழ்நிலை நிலவுவதாக தெரிகிறது .

21ஆம் நூற்றாண்டிலும் பெண் சிசுகொலை நடந்துதான் வருகிறது. இதற்கு ஆண், பெண் என்று இரண்டு தரப்பினருமே காரணமாக உள்ளனர்.

உண்மையில் தற்போது ஆண்களைவிட இருபடி முன்னே பெண்கள் உள்ளனர். எனவே பெண்களின் சத்தியை நாம் உணரவேண்டும். வேலைக்கு செல்லும் பெண்களைத்தான் ஆண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். தற்போது காலம்மாறிவிட்டது. இது வெறும் பொருளாதாரரீதியாக எடுக்கும் முடிவல்ல, ஆண்களின் எண்ணமே மாறிவிட்டதை தான் காட்டுகிறது என்றார் மோடி.

Leave a Reply