ஒரு சில இடங்களில் மட்டுமே  அருளூற்று சுலபமாகக் கிடைக்கும் ஆலயங்களில் கொலு வீற்றிருக்கும் , தெய்வங்கள் மிகவும் சக்தி படைத்தவை என்று சொல்லபடுகிறது இப்போதெல்லாம் ஆலயங்கள் புற்றீசல் போல, அவரவர் நோக்கம் போல் தெரு முனைகளிலும், நடைப் பாதைகளிலும் சாலையோரங்களிலும் தோன்றிவிட்டன.

இன்றைக்கு ஆலயம் அமைப்பதென்பது , பக்தி உணர்வை வளர்ப்பதற்கென்றே நிலை மாறி முற்றிலும் வணிகமாகப் போய்விட்டது . இது மிகவும் வருந்துவதற் குரியதாகும் . இதனால் மற்ற மதத்தவர்களால் நமது மதம் விமர்சனதிற்கு ஆளாகி வருவதை நாம் நிச்சயமாக ஒப்புகொள்ளதான் வேண்டும் . நான்கு அம்மன் கோயில்கள் , ஒரே வரிசையில் சென்னை மாநகர நடைபாதைகளில் எழுப்பபட்டிருப்பதை மிக சாதாரணமாகவே அறிந்து கொள்ளலாம் . இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால் , ஒரு ஆலய வழிப்பாட்டைச் செய்து வருபவர்களுக்குள் குரோதம் ஏற்படுமாயின் , எதிர் வாடையில் கொஞ்சம் பெயரை மாற்றி அங்கே ஒரு ஆலயம் எழுப்பப்படும். இதுவும் மிக சாதாரணமாக போய்விட்டது .தெய்வம் எப்படி குடிகொண்டிருக்கும் .

பூமிக்கு அடியில் நீர்த்தாரை இருக்கிறது .ஆனால் பூமியில் எந்த இடத்தில் தோண்டினாலும் நீர் கிடைப்பதில்லை .நீர் ஊற்று இருக்கும் இடத்தை கண்டறிந்துதான் கிணறு தோண்ட வேண்டும் . தோண்டிய இடத்தில எல்லாம் நீர் ஆதாரத்தை காண முடிவதில்லை . இதனை கண்டறியவும் திறமையுள்ள புவியியல் அமைப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் கை நீட்டுகின்ற இடைத்தை தோண்டினால் ,நீர் கிடைத்து விடுகின்றது அல்லவா . பூமிக்கு அடியில் நீர்த்தாரை எல்லா இடங்களிலும் இருந்தாலும் ,வல்லுனர்கள் தெரிவு செயும் இடங்களில் மட்டுமே நீரூற்று
இருப்பது போலவே , ஆண்டவன் அனைதிலும் வியாபிதிருந்தாலும், ஒரு சில இடங்களில் மட்டும் அருளூற்று சுலபமாகக் கிடைக்க முடிகிறது.

ஞானிகளும்,சித்தர்களும் இது போன்ற இடங்களைக் கண்டறிந்து தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.அந்த இடங்களிலுள்ள மூர்த்திகளுக்கு வல்லமை அதிகமென்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.எனவே தான் ,சில ஆலயங்கள் மிகுந்த சக்தி படித்தவை என்பது அனுபவத்தால் உணரப்பட்ட ஒரு விசயமாக இருந்து வருகிறது.

இறைவனை சந்திக்க
எவன் விரும்புகிறானோ
அவனை சந்திக்கவே
இறைவன் விரும்புகிறான் …………..

"என்ன இல்லை இந்து மதத்தில் "என்ற நூலில் இருந்து

Leave a Reply