டில்லியில் பாதுகாப்பு இல்லை என்ற மம்தாவின் கருத்து ஏற்ப்புடையதே திட்டகமிஷன் அலுவலகம் முன்பு மம்தா பானர்ஜியின் மீது இடதுசாரிகள் நடத்திய தாக்குதலுக்கு பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று மம்தா பானர்ஜியுடன் தொலை பேசியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது : பாஜக., திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தாவுடன் நல்ல நட்புமுறையே கடைபிடித்து வருகிறது.

டில்லியில் பாதுகாப்பு இல்லை என்ற மம்தாவின் கருத்து ஏற்ப்புடையதே .காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசின் ‌ஆட்சியில் தலைநகர் டில்லியில் நாம் ஒவ்வொரு நாளும் அராஜகத்தை கடந்துசெல்ல வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார்.

Leave a Reply