அருள் எனும் போதே இருள் என்பதும் உடன் தொக்கி நிற்கிறது ஒரு நல்லது என்றால் ஒரு கேட்டது என்பதும் கூடவே இருக்கும்.அது தான் கலியுகத்தின் குணம். எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர் நிழல் கருப்பாக தான் இருக்கும் .

 

தீயது இருந்தால் அன்றி நல்லதின் அருமை பெருமைகள் அறியபடாது .

கைகளும்,கால்களும் எவ்வளவு சக்தி கொண்டதாக இருப்பினும் அதன் அருமை தெரிய அவைகளுக்கு பங்கம் வர வேண்டும்.ஒரு நக சுத்தி அவனது நீங்கிய உடன் முன்பு இருந்த அதே விரல் நமக்கு மிக மிக சுகமான ஒன்றாக தோன்றும் .அனால் அங்கு ஒரு புண் வருவதை நாம் முன்னே அறிந்திருக்க மாட்டோம் .

கடவுள் நெறி சார்ந்த விசயங்களிலும் நாத்திகம் சார்ந்த விசயங்களால் தான் ஆன்மிகம் பெரிதும் பலமும் மதிப்பும் கொள்கிறது.

அருள் எனும் போதே இருள் என்பதும் உடன் தொக்கி நிற்கிறது .அருளுக்கு எதிரான விசயங்களும் அருளுக்கு இணையாகப் போட்டியிடும்.

Leave a Reply