நாட்டின் மிகப் பெரிய மதவாத கட்சி  காங்கிரஸ் நாட்டின் மிகப் பெரிய மதவாத கட்சியாக காங்கிரஸ் தான் உள்ளது என்று பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

சத்திஷ்கர் மாநில பாஜக.,வின் புதிய தலைமை கட்டிடத்தை

திறந்துவைத்து அவர் மேலும் பேசியதாவது.. கடந்த 50 வருடங்களுக்குமேலாக காங்கிரஸ் நாட்டை ஆண்டிருக்கிறது.

பல மதங்களும் சாதிகளும் நிறைந்த இந்நாட்டை சகோதர ஒற்றுமையுடனும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அந்த கட்சிக்கு உள்ளது .

ஒவ்வொரு முறையும், தேர்தல் வரும் போது, வாக்குகளைபெற இந்து, முஸ்லிம், கிறுஸ்து பிரச்சினைகளை கிளப்பி அரசியல் ஆதாயம்தேடுகிறது. ஏழைகளின் மேம்பாடு, வேலைவாய்ப்பு பெருக்கம், பொருட்களின் விலை யேற்றத்தை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட காரியங்களில் காங்கிரஸ் ஒன்றும்செய்யவில்லை. தே.ஜ. ஆட்சியின்போது பொருட்களின் விலை நிலையாகவே இருந்தது என்று அவர் கூறினார்.

Leave a Reply