ஆயுதத்துடன்  எச்.ராஜாவின் தோட்டத்திற்க்குள் புகுந்த  மர்மநபர்கள் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதத்துடன் தனதுதோட்டத்திற்கு வந்த மர்மநபர்கள், காவலாளியை மிரட்டிசென்றதாக பா.ஜ.,கட்சியின் மாநில துணை தலைவர் எச்.ராஜா புகார்செய்துள்ளார்.

பாஜக.,வின் மாநில துணைத்தலைவர் எச்.ராஜா. அவர்களது வீடு காரைக்குடி சுப்பிரமணிய புரம் வடக்கு விஸ்தரிப்புபகுதியில் உள்ளது. காரைக்குடி அருகே இருக்கும் கண்டனூரில் பண்ணை வீடு மற்றும் தோட்டம் உள்ளது.

அங்கு காவலாளியாக கிட்டு என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 9ம்தேதி இரவு 9 மணிக்கு 30 திலிருந்து 35 வயது மதிக்கத்தக்க நான்கு வாலிபர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட படு பயங்கர ஆயுதங்களுடன் எச்.ராஜாவின் தோட்டத்துக்கு வந்துள்ளனர்.

காவலாளி சிட்டுவிடம், எச் ராஜா எங்கே என்று கேட்டு மிரட்டி உள்ளனர். அவரை பிடித்து தள்ளி விட்டு அத்து மீறி உள்ளே நுழைந்து பண்ணை வீட்டின் கதவைதிறந்து உள்ளேசென்று பார்த்துள்ளனர். அங்கு ராஜா இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு, தாங்கள் வந்த காரிலேயே தப்பிசென்றுள்ளனர். செல்வதற்கு முன்பு எச்.ராஜாவின் பாதுகாப்புக்காக உள்ள காவல்துறையினர் எங்கே தங்கியுள்ளனர் என கேட்டு மிரட்டியுள்ளனர்.

இது பற்றி எஸ்பி. சக்தி வேல் மற்றும் டி.எஸ்.பி மங்களேஸ் வரனிடம் நேற்று ராஜா புகார்செய்துள்ளார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் , “கடந்த 9ம் தேதி திருச்செந்தூரில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அப்போது எனது தோட்டத்திற்கு பயங்கர ஆயுதங்களுடன் என்னை கொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் மர்மநபர்கள் வந்துள்ளனர். காவலாளியை மிரட்டிவிட்டு வீட்டிற்கு உள்ளே சென்று என்னை தேடியுள்ளனர்.

காரைக்குடியில் இருக்கும்போது தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்குவது என்பது வழக்கம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எனக்கு இமெயிலில் கொலைமிரட்டல் வந்தது. தற்போது ஆயுதங்களுடன் தாக்க வந்துள்ளனர். இதுகுறித்து கட்சி தலைமைக்கும் தகவல் அனுப்பியுள்ளேன் ” என்றார்.

Leave a Reply