ஸ்ரீராம நாம ஜப யோக வேள்வியை பொன். ராதாகிருஷ்ணன் மதுரையில் தொடங்கி வைத்தார் அயோத்தியில் ராமர்கோயில் அமைய ஸ்ரீராம நாம ஜப யோக வேள்வியை பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மதுரையில் தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்ட விஷ்வ இந்து பரிஷத்தின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் அமைய ஸ்ரீராம நாம ஜபயோக வேள்வி நேற்றிரவு தொடங்கப்பட்டது . பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த ஜபவேள்வியை தொடங்கி வைத்தார். திருவேடகம் ராமகிருஷ்ண தபோவன சுவாமி நியமானந்தா இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

பிறகு இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர்கோயில் கட்ட வேண்டும் என்ற இந்துக்களின் உணர்வு களுக்கு ஏற்றவாறு, இந்து துறவிகளின் வேண்டு கோளின்படி இந்தவேள்வி தொடங்கப்பட்டுள்ளது . நகரம், கிராமம், வீடு, கோயில் என்று அனைத்து இடங்களிலும் நாடுமுழுவதும் உள்ள மக்கள் இந்த ராம நாம ஜெபத்தில் மே 13ம்தேதி வரை ஈடுபடுவர்.

கூட்டாகவோ, தனியாகவோ, ஒவ்வொருவரும் ராமர்கோயில் அமைய வலியுறுத்தி இந்த ராம நாம ஜெபத்தை வேண்டும் போதெல்லாம் உச்சரித்த படி இருப்பர். இதன்தொடர்ச்சியாக ஏப்.19ம் மாலை 6 முதல் 7 மணிவரை ஒரேநேரத்தில் நாடெங்கும் மக்கள் விரதமிருந்து, இந்த ராம நாம ஜெபத்தை மேற்கொள்ள கேட்டு கொள்ளப் பட்டுள்ளது என்றார்.

Leave a Reply