உலகதமிழர்கள் வாழ்வில் ஒளி ஏற்றவும், உன்னத நிலைகளை தமிழர்பெறவும் நல்வாழ்த்து இந்த ஆண்டில் தமிழர்கள் அனைத்து துறையிலும் முன்னேற பிரார்த்திப்பதாக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த வாழ்த்துச் செய்தி:

உலகதமிழர்கள் வாழ்வில் ஒளிஏற்றவும், உன்னத நிலைகளை தமிழர்பெறவும் தமிழர்களின் புத்தாண்டு வெற்றிமுழக்கமிடும் விஜயத்தோடு விஜய ஆண்டாகவருகிறது . இந்த இனியபுத்தாண்டு தினத்தில் உலகதமிழர்கள் அனைவருக்கும் எனது சார்பிலும் தமிழக பாஜக சார்பிலும் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

வருகின்ற விஜய ஆண்டின் உதயம் இந்திய தமிழ்மீனவர்களுக்கு பாதுகாப்பை கொடுக்கவும் தமிழகம் முழுவதும் மாதம்மும்மாரி பொழியவும், தமிழர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி, தமிழ் இளைஞர்களும் நமதுமாணவ செல்வங்களும் உலகே ஆளும் வல்லமை படைத்தவர்களாக ஊக்கம்பெறவும் தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் தரணிமுழுவதும் தழைத்து ஓங்கவும் இலங்கை தமிழர் இன்னல்கள் முடிந்து இனி வருவன அனைத்தும் விஜயம் என்று வெற்றிமுழக்கமிடவும் உலகதமிழர் ஒன்றுபட்டு உன்னத தமிழையும், தமிழ்மாண்பையும் காக்கவும் தமிழ்த் தாயின் அருள் ஒவ்வொரு தமிழனின் வாழ்வை உயர்த்தவும் எல்லாம்வல்ல இறைவனின் அருள் இந்த விஜயஆண்டின் மூலம் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திப்பதோடு அனைவருக்கும் அனைத்து நலன்களும் கிடைக்க இந்தவெற்றிகரமான விஜயபுத்தாண்டு தினத்தில் வாழ்த்துகிறேன்

Leave a Reply