நேதாஜி பற்றிய மர்மங்களை வெளிச்சத்துக்கு  கொண்டுவர வேண்டும்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய மர்மங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர நேதாஜியின் குடும்பத்தினர், குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் தேசத்திற்க்காக போராடிய நேதாஜி குறித்த மர்மங்களைநீக்க அவர் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட பிரதமர் மன்மோகன்சிங்கை, மோடி வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக நேதாஜியின் மரணம்குறித்த மர்மங்களை அரசு நீக்கவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இக்கடிதத்தில் நேதாஜி குடும்பத்தைச்சேர்ந்த 24 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

Leave a Reply